Time Pass

அழகாபுரியைஆண்ட மன்னன் கதை / The Story of alagapuri king

Spread the love
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

அழகாபுரியை மதிவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . ஒருநாள் அவன் காட்டுக்கு வேடடையா ட சென்றான். அவனுடன் மூன்று மெய்க்காப்பாளர்கள் சென்றனர்.

நடுக்காட்டில் சென்றபோது புதருக்குள்ளிருந்து ஒரு புலி வந்ததது . அதைக்கண்டதும் மெய்க்காப்பாளர்கள் மன்னனை தனியே விட்டுவிட்டு மற்றோரு புதருக்குள் போய் ஒளிந்துக்கொண்டார்கள்.

மன்னனைக் புலி இழுத்துக்கொடண்டு சென்றது .

 

மன்னனுக்கு வாரிசு கிடையாது.புலியிடம் சிக்கிய மன்னன் மீள மாட்டான் என்று கருதிய மெய்க்காப்பாளர்கள்,அடுத்த அரச பதவி தங்களுக்கு வர வேண்டும் என்று கனவு கண்டனர்.

அவர்களில் ஒருவன், வயதில் மூத்தவன் நான் எனக்கு அனுபவம் அதிகம் நான் தான் மன்னன் ஆவேன் என்று கூறினான்.

அதை தடுத்து பேசினான் மற்றெருவன் . அனுபவம் இருந்து என்ன பயன்? வீரம் இருக்க வேண்டாமா ? அது என்னிடம் இருக்கிறது என்றான்.

இவர்கள் பேசுவதைக் கேட்ட மூன்றாவது மெய்க்காப்பாளன் உங்கள் இருவரை விட நான் புத்திசாலி, ஆகவே நான் மன்னன் ஆவதே முறை என்றான்.

யார் மன்னன் ஆவது என்பதில் வாக்குவாதம் உருவானதால் மூவரும் தங்கள் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு ஓருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

காட்டில் புலியிடம் சிக்கிய மதிவர்மனை ,ஒரு வேடன் காப்பாற்றி , காயத்திற்கு மருந்திட்டு வந்தான்.

காயம் ஆறியதும் ஆரண்மனைக்கு திரும்பினான் அரசன்.

மன்னனைக் கண்டதும் மெய்க்காப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசே நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர்களா? எங்களை மன்னித்துவிடுங்கள், புலிக்கு பயந்து நங்கள் ஓடிவிட்டோம். சுயநலம் எங்கள் கண்ணை மறைத்துவிட்டது . எங்களுக்கு தண்டனை கொடுத்துவிடாதீர்கள் என்று மதிவர்மனின் காலில் விழுந்து கேட்டனர்.

உங்களை நம்பி வந்த மன்னனை, நிராயுதபாணியாக காட்டில் தவிக்க விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள் . சுயநலவாதிகளான உங்களுக்கு மெய்க்காப்பாளர்கள் பதவி எதற்கு? என்று அவர்கள் பதவியை பறித்து அழகாபுரியை விட்டுவெளியேற உத்தரவிடடான் மன்னன்.

தக்க சமயத்தில் தன்னை புலியிடமிருந்து மீட்ட வேடனுக்கு நன்றி கடனாக அவனை அரண்மனைக்கு வரவழைத்து ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். மெய்க்காப்பாளர்களை தேர்வு செய்ய ஆணை பிறப்பித்தான்!

sharemarketrider
I am in stock market nearly 7 years. I have a experience in stock market technical analysis. Learning purpose here i share my market information and technical calls.
http://sharemarketrider.com

Leave a Reply

Signup now and receive an email once I publish new content.