சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரிப்பு
செவ்வாய் கிழமை அன்று தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது .மும்பை பங்கு பந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 23 புள்ளிகள் முன்னேறியது.
சீனாவின் நிலைப்பாடு
எதிர்காலத்தில் பொருளாதாரம் இன்னும் தாராளமாக்கப்படும். என்றும் , சில பொருள்கள் மீது இறக்குமதி வரியை குறைக்க இருப்பதாகவும் சீனா அறிவித்தது . இதனையடுத்து இதர ஆசிய பங்கு சந்தைகள் சுறுசுறுப்படைந்தன. அதன் தாக்கம் இங்கும் இருந்தது.
மேலும் இந்த வார இறுதியில் தொடங்கும் நிதிநிலை முடிவுகள் சீசன் மற்றும் முக்கிய புள்ளி விவரங்கள் பற்றிய நம்பிக்கை காரணமாக பங்குகளின் முதலீடு அதிகரித்தது .அந்த நிலையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
மும்பை பங்கு சந்தையில் நேற்று உலோகத்துறை குறியீட்டு எண் அதிகப்படசமாக 2 சதவீதம் ஏற்றம் கண்டது. அடுத்து ரியல் எஸ்டடேட் , பொறியியல் சாதனங்கள் , வாங்கி, உள்கட்டமைப்பு, பொதுத்துறை, மின்சாரம், தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. அதே சமயம் வாகனம், மருத்துவம், உள்பட சில துறைகளின் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஸ்மால்கேப் குறியீட்டு எண் 0.02 சதவீதம் குறைந்தது. மிட்கேப் குறியீட்டு எண் 0.18 சதவீதம் உயர்ந்தது .
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் ,14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது .இந்த பட்டியலில் ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாட்டா ஸ்டீல் ,கோல் இந்திய , லார்சன் அண்டு டூப்ரா , பார்தி ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, யெஸ் பேங்க், ஓ. ன்,சி,சி 16 நிறுவன பங்குகளின் விலை . அதிகரித்தது. அதே சமயம் ஹீரோ மோட்டோகார்ப், டாட்டா மோட்டர்ஸ், எச் டி எப் சி வங்கி மகிந்திரா ஆண்டு மஹிந்திரா எச்,டி எப் ,சி நிறுவனம் ,இன்டெஸ் இந் பேங்க், சன் பார்மா உள்பட 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது
சென்செக்ஸ்
மும்பை பங்கு சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 91.71 புள்ளிகள் அதிகரித்து 33,880.25 புள்ளிகளாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 33,949.98 புள்ளிகளுக்கும் குறைந்தபட்ஷமாக 33,813.30 புள்ளிகளுக்களும் சென்றது . இனி சந்தையில் 1,264 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,444நிறுவனப் பங்குகளின் விலை சரிந்து இருந்தது. 132 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ 2,292 கோடியாக குறைந்தது.கடந்த திங்கள்கிழமை அன்று அது 4,492 கோடியாக இருந்தது,
தேசிய பங்குச்சந்தை
தேசிய பங்கு சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 22.90 புள்ளிகள் முன்னேறி 10,402.25 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,424.85 புள்ளிகளுக்கும் , குறைந்தபட்ஷமாக 0,381.50 புள்ளிகளுக்கும் சென்றது.