Time Pass

கடவுள் – மனிதன் உரையாடல் / God-Man Discussion

ஒரு கிராமத்தில் வசித்து வந்த மனிதன் திடிரென இறந்து போனான்…! அவன் அதை உணரும் போது . கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்….!
கடவுள் : “வா மகனே…! நாம் கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது…!
மனிதன்: “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா ? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?
கடவுள்: “மன்னித்துவிடு மகனே …! உன்னை கொண்டு செல்லுவதற்க்கான நேரம் இது …!
மனிதன்: “அந்த பெட்டியில் என்ன உள்ளது?”
கடவுள்; ‘ “உன்னுடைய உடமைகள்…!


மனிதன்: “என்னுடைய உடைமைகளா ..! என்னுடைய பொருட்கள் , உடைகள் ,பணம் எல்லாமே இதில்தான் இருக்கின்றனவா ?”
கடவுள்: “நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது. அல்ல அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது …!
மனிதன்: . “அப்படியானால் என்னுடைய நினைவுகளா ?”
கடவுள்: “அவை காலத்தின் கோலம் ..!
மனிதன்: “என்னுடைய திறமைகளா ?”
கடவுள் : “அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது…!
மனிதன்: “அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா…?
கடவுள் : “மன்னிக்கவும்! குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்க்கான வழிகள் …!
மனிதன் : “அப்படியென்றால் என் மனைவி மற்றும் மக்களா?”
கடவுள் : “உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல …!அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்படடவர்கள்.!”
மனிதன் : “என் உடலா?”
கடவுள் :”அதுவும் உனக்கு சொந்தமானதல்ல…! உடலும் குப்பையும் ஒன்று..!”
மனிதன் : “என் ஆன்மா?”
கடவுள் : “அதுவும் உன்னுடையது அல்ல …!அது என்னுடையது…!”
மனிதன் : மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்த பெட்டியை வாங்கி திறந்தவன் காலி பெட்டியை கண்டு அதிர்ச்சியடைகிறான்…!

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் “என்னுடையது என்று எதுவும் இல்லையா?” என கேட்க…!
கடவுள் சொல்கிறார் : அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது…! வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..!

ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாக வாழ் …!எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே…!

ஒவ்வொரு நொடியும் வாழ் …!உன்னுடைய வாழ்க்கையை வாழ்…!

மகிழ்ச்சியாக வாழ் …! அது மட்டுமே நிரந்தரம்…!

உன் இறுதி காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது ..!
வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம் …!

Show More

sharemarketrider

Learn Everything.

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close